Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சாணக்கியன் மூளை இல்லாத அரசியல்வாதி: அமைச்சர் வியாழேந்திரன் சாடல்

.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன்மீது கறைபூச துடிப்பதாகவும் அமைச்சர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் லஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாணக்கியன், தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார்.

சம்பவம் நடந்த போது நான் அங்கு இருந்ததாகவும் லஞ்ச ஊழல் அதிகாரிகள் வந்தபோது அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாக பொய் குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.

இதன்மூலம் சாணக்கியன் அரசியல் இலாபம் கான துடித்து வருகின்றார். அவ்வாறு தான் எவரிடமும் லஞ்சம் வாங்கவில்லை.

லஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் கடமையில் இருக்கும்போது தான் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும் தனது மெய்ப்பாதுகாவலர்கள் மூலம் அதனை நிரூபிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுகின்றேன்.

அவ்வாறு நிரூபிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா? என பகிரங்க சவால் விடுப்பதாகவும் அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்துவரும் சாணக்கியனுக்கு தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லை எனவும் அவர் மூளை இல்லாத அரசியல்வாதி எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.