Breaking News
சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த சீன் இது தான்! பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!
அண்ணாமலை படத்தில் ரஜினிக்கும் குஷ்புவுக்கும் மகளாக நடித்த நடிகை தக்ஷியாகினி.
சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த சீன் இது தான்! பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!
ரஜினி கூட நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அப்படி ஒரு ஆசையில் வந்தவர்தான் நடிகை தக்ஷியாகினி. இவர் வேறு யாருமில்லை. அண்ணாமலை படத்தில் ரஜினிக்கும் குஷ்புவுக்கும் மகளாக நடித்த நடிகைதான் இந்த தக்ஷியாகினி. ஈரமான ரோஜாவே படத்தின் மூலமாக அறிமுகமானார் தக்ஷியாகினி. அதற்கு முன் பாண்டியராஜ் மற்றும் பாக்யராஜிடம் வாய்ப்புக்காக அலைந்திருக்கிறார்.
அதன் பிறகே ஈரமான ரோஜாவே படத்தில் மோகினிக்கு தோழி கேரக்டரில் நடித்திருக்கிறார். அதன் பிறகு ஒரு சமயம் ஏவிஎம்மிலிருந்து ஸ்டூடியோவிற்கு வர வேண்டும் என தக்ஷியாகினிக்கு போன் வர ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் ரஜினி இருப்பார் என தக்ஷியாகினி ஆர்வமாக போயிருக்கிறார்.ஆனால் ரஜினி அப்பொழுது இல்லையாம். அதன் பிறகு ஒருவாரம் கழித்து வாகினி ஸ்டூடியோவிற்கு வர சொல்லியிருக்கிறார்கள். அங்கு ரஜினி நடித்துக் கொண்டிருந்தாராம். அவர்
ஷாட் முடிந்த பிறகு தக்ஷியாகினியை பார்த்ததும் ரஜினி தோளுடன் தழுவி அழைத்துக் கொண்டு போய் மனோரமாவிடம் இவர்தான் தக்ஷியாகினி. எனக்கு மகளாக நடிக்க போகிறார் என்று சொல்லியிருக்கிறார்.அதன் பிறகே இந்தப் படத்தில் நாம் இருந்திருக்கிறோம் என தக்ஷியாகினிக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. அதன்பிறகு அண்ணாமலை படத்தில் ஒரு சீன். கோபத்தில் மகளை அடிக்கிற மாதிரி சீன். அதை ரஜினியிடம் மட்டும்தான் சொன்னார்களாம். ஆனால் தக்ஷியாகினிக்கு டையலாக் மட்டும்தான் சொன்னார்களாம். டையலாக் பேசி முடித்த பிறகு ரஜினி தக்ஷியாகினியை அடித்தாராம். இது தக்ஷியாகினிக்கு ஒரே ஷாக்காம். ஷாட் முடிந்ததும் ரஜினி தக்ஷியாகினியிடம் ‘என்ன வலிக்குதா’ என கேட்டாராம். இருந்தாலும் படத்தில் எனக்கு 4, 5 சீன் என்றாலும் படமுழுக்க ரஜினி சார் கூட முழுக்க வாழ்ந்த மாதிரி ஒரு ஃபீல் இருந்தது என தக்ஷியாகினி கூறினார் ,
அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை படத்தின் 175 வது பட விழா கொண்டாடப்பட்டதாம். அந்த படத்தில் எவ்வளவோ நல்ல சீன்கள் இருக்கின்றன. ஆனால் அந்த விழா மேடையில் ரஜினி இந்தப் படத்தில் தனக்கு பிடித்த சீன் என் மகளை அடித்த சீன் தான் என்று கூறினார். அதுவே எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது என தக்ஷியாகினி கூறினார்.