Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது – டக்ளஸ் தேவானந்தா

தேர்தல் பிரச்சாரங்கள்.

தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று புதன்கிழமை (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெளிவாக இருக்கின்றார்கள் .தேர்தல் தொடர்பில் நீண்ட கால அனுபவங்கள் அம்மக்களுக்கு இருக்கின்றது.சரியான திசை வழி நோக்கி அம்மக்கள் அணி திரள்வார்கள் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் இருக்கலாம்.அந்த கொள்கைகள் வேலைத்திட்டங்களில் சுயலாபங்கள் தான் கலந்து இருக்கின்றது.

இது தவிர தேர்தல் புறக்கணிப்பு பொது வேட்பாளர்கள் விடயத்திலும் எம்மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அதனை எதிர்வரும் 22 ஆம் திகதி அறிந்து கொள்வோம். இருந்தாலும் எனது ஜனாதிபதி வேட்பாளர் அம்மான் ரணில் விக்ரமசிங்க தான் எனது தெரிவும் விருப்பமும் கூட.

அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு.எனவே அதனால் தான் மக்கள் தற்போது நிதானமாக செயற்பட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டார்.