Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

விபத்தில் இறந்த காதலர்களுக்கு நடைபெற்ற பேய் திருமணம்.

.

 

மலேசியாவை சேர்ந்த ஜிங்ஷன் என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த லீ என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். ஜிங்ஷன் கடந்த 2-ந் திகதி தனது காதலியுடன் பேங்கொக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தஹார். இவர் தனது காதலியை விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 24-ந் திகதி வடமேற்கு மலேசியாவில் பேராக் பகுதியில் நடந்த ஒரு விபத்தில் ஜிங்ஷன்- லீ சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், விபத்தில் அவர்கள் மரணம் அடைந்தது இருவரின் குடும்பத்தினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விபத்தில் இறந்த ஜிங்ஷன்- லீயின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, லீ- ஜிங்ஷன் இருவரையும் மறுமையில் கணவன்-மனைவியாக ஒன்றிணைக்கும் வகையில் பேய் திருமணம் என்ற சடங்கை நடத்தி உள்ளனர். பேய் திருமணம் என்பது திருமணம் ஆவிகளை இணைக்கும் ஒரு சடங்கு ஆகும். இதன்படி ஒரு மண்டபத்தில் இறந்த தம்பதியின் புகைப்படத்தை வைத்திருந்தனர். அதில் ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாக குறிப்பிட்டு அவருக்கு திருமண சடங்கு நடத்தி உள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது