Breaking News
அனுரவிடம் நாட்டை கையளிக்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்: 48 நாட்களில் அந்த சந்தர்ப்பம்
.
அதல பாதாளத்தில் இருந்து நாட்டைக் மீட்டெடுப்பதற்கான சரியான தொலைநோக்குப் பார்வையும், கொள்கையும் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டைக் கையளிக்க மக்கள் காத்திருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“நாகரீகமான ஆட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இன்னும் 48 நாட்களில் அந்த தலைவரை நியமிக்க வாய்ப்பு உருவாகும்.
அனுரவை அந்த இடத்தில் அமர்த்த மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.” எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அனுரகுமார திஸாநாயக்க தமது கட்டுப்பணத்தை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.