ஈரான் மீதான எங்கள் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது
.
ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எங்களை பொறுத்தவரை இஸ்ரேலின் நலன் தான் முக்கியம். ஈரான் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் பிளாஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியது.
அத்தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடாத்துவதற்கான முஸ்தீபுகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேல் எம் மீது தாக்குதல் நடாத்தினால் கடும் தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்று ஈரான் கூறிவருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதோ, எண்ணெய் களஞ்சியசாலைகள் மீதோ தாக்குதல்கள் நடாத்த வேண்டாம்.
இத்தகைய தாக்குதல்கள் உலகளவில் பிரச்சினையை ஏற்படுத்தும். அதோடு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
இதேவேளை பிளாஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கக்கூடிய டாட் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு கட்டமைப்பையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. இத்தகைய சூழலில் இஸ்ரேல்’ பிரதமர் அலுவலகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் ¤ ஈரான் இடையே தொடர்ந்து கொந்தளிப்பான நிலை நீடித்து வருவதால் இருநாடுகளும் எப்போது வேண்டுமானாலும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபடக்கூடிய நிலை நிலவிவருவதாக போரியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.