Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

துஷ்பிரயோகத்தால் சிறுமி உயிரிழப்பு; கொந்தளிக்கும் மக்கள்

சிறுமியின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்ததால் சீற்றமடைந்த  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு சென்ற சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளாகியுள்ளார். சகோதரியின் கணவரான 18 வயது நபரையும் அவரது குடும்பத்தவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

வன்முறைக்குள்ளான சிறுமி  மரணம்.

வன்முறைக்குள்ளான சிறுமிக்கு மூன்று தடவை மாரடைப்பு ஏற்பட்டது இரண்டு தடவை நிலைமையை சரி செய்தோம் மூன்றாவது தடவை ஒன்றும் செய்ய முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 8ம் திகதி தலைநகர் டாக்காவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிப்பட்டு ஆறு நாட்கள் உயிருக்கான போராடிய சிறுமி நேற்று உயிரிழந்தார். மகுராவிற்கு இராணுவ ஹெலிக்கொப்டரில் சிறுமியின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் கடும் ஆர்பாட்டங்களின் மத்தியில் அது தரையிறங்கியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். சிறுமியின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். டாக்கா பல்கலைகழகத்திலும் இறுதிநிகழ்வு போன்ற ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாணவிகள் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற பின்னர் உரையாற்றியுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதை அரசாங்கம் துரிதப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் பாதுகாப்பை கோரியுள்ளனர்.பங்களாதேஸ் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்னவென்பது குறித்த தெளிவற்ற தன்மை காணப்படுவதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் இது குறித்த தெளிவான விளக்கம் அவசியம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.