பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்: தம்மிக்க பெரேரா – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளரை நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 07) அறிவிக்க உள்ளது.
எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில் பொதுஜன பெரமுனவின் பல தொகுதிக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிலளித்துள்ளார்.
ஜூலை 29ஆம் திகதி கட்சியின் உயர்பீடத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தானும் அல்லது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் கட்டுப்படவில்லை என செஹான் சேமசிங்க எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
அதன்படி, கட்சி மேற்கொள்ளும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை அறிவிக்க அக்கட்சியின் உயர்பீடத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாளை இதனை பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரியவருகிறது.