பலதும் பத்தும், யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய கொடிக்கு பதிலாக ஏற்றப்பட்ட கறுப்பு கொடி!
,
![](https://www.sankathi.com/uploads/038.jpg)
* தேசிய கொடிக்கு பதிலாக ஏற்றப்பட்ட கறுப்பு கொடி! : இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிகடனப்படுத்தி, பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்டடுள்ளது. அத்துடன் பல்கலைகழகதின் சுற்றுப்புறத்திலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.
* மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் விடுதலை : 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த 16 கைதிகள், மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* எளிமையாக சுதந்திர தின கொண்டாட்டம் : 77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதற்கு ஜனாதிபதி கலந்துகொள்ள வரும்போது ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லாமல், மூன்று பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் வருகை தந்திருந்தார். அதேபோல பிரதமரும் மற்ற விருந்தினர்களும் வந்தபோதும், ஒரே ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்தது. கடந்தகால சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மற்றும் பிற தலைவர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் கணவர்களுடன் பலத்த பாதுகாப்புடன் வருகை தருவார்கள். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் எளிமையாக அரசியல் பிரமுகர்கள் சுதந்திர கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.