இலங்கை எஸ்.ஜெய்சங்கர்; ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்டவர்களுடன் பேச்சு
.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இதன்படி, ஒரு நாள் விஜயமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4ஆம் திகதி) அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி புது டில்லிக்கு விஜயம் செய்யவுள்ள சந்தர்ப்பத்தில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கடந்த ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இதுவே பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
முன்னதாக தேர்தலுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், டில்லியில் வைத்து ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்திருந்தார்.
இந்திய அமைச்சரின் இலங்கைக்கான ஒரு நாள் பயணத்தின் போது பல இந்திய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.