Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மலையகம் எமது தாயகம். நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்- வீ.இராதாகிருஸ்ணன்.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாராக இல்லை!

மலையகம் எமது தாயகம். நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதனை விடுத்து, நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாராக இல்லை” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற இயற்கை அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘சீரற்ற காலநிலையால் மலையகப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தோட்டங்களிலிருந்து நகரங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் ஆலயங்களில் இருக்கும் சூழ்நிலையில், இப்போது அவர்களை வீட்டுக்குப் போகுமாறு அரசாங்கம் கூறுகின்றது. அவர்களுக்குத் தேவையான எந்தவிதமான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்காமலேயே அவர்களைப் போகுமாறு கூறுகின்றனர்.

அவர்கள் இருப்பதற்குத் தகுதியற்ற இடமே அது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் கூறியதாலேயே அந்த மக்கள் முகாமுக்கு வருகின்றனர். இப்போது அந்த மக்களை போகுமாறு கூறினால் அதன் அர்த்தம் என்ன? முறையாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கையைப் பெற்ற பின்னரே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தொடர்ந்தும் இந்த விடயம் தொடர்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வேவெண்டன் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது வேறு பாடசாலைகளுக்குச் செல்லுமாறு அல்லது தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்குச் செல்லுங்களெனத் தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மக்களின் நிலைமையைப் புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன’’ என்றார்.