Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மன்னாரில் வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பியவர் கத்தி முனையில் கடத்தல்; போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்!

.

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக  சென்று மீண்டும் தனியார் பஸ்ஸில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடத்தல் சம்பவம்  நேற்று வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி உள்ளது.

இந்த  சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியதோடு, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில்  மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, காட்டாஸ்பத்திரி பகுதியில் வழிமறித்து பஸ்ஸில் ஏறிய ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரை தாக்கி பஸ்ஸில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற நிலையில் கடுமையாக தாக்கிய நிலையில் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.
காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற குழுவினரே குறித்த நபரை நடத்தியதாகவும் கடத்தியதற்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.

மேலும், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் பேசாலை பொலிஸார் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.