Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம் ராஜபக்ஷ .

ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ரணில் கோரவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ரணில் கோரவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரவில்லை. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

கேள்வி – அடுத்த அரசியல் திட்டமிடல் என்ன?

பதில் – தேர்தலில் வெற்றி பெறுவதே பிரதான திட்டம்.

கேள்வி – எவ்வாறான திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளீர்கள்?

பதில் – தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும், திட்டங்களை செயற்படுத்துவோம்.

கேள்வி – ஜனாதிபதி வேட்பாளர் பற்றி தீர்மானித்துள்ளீர்களா?

பதில் – இதுவரை இல்லை. எமது வேட்பாளரை களமிறக்குவோம்.

கேள்வி – உங்களின் கையில் தான் அதிகாரம் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறதே?

பதில் – இல்லை, இல்லை அவ்வாறில்லை. அதிகாரத்தை பகிர்ந்துகொண்டுள்ளோம்.

கேள்வி – நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா?

பதில் – அவர் சிறிது காலம் இருக்க வேண்டும்.

கேள்வி – ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாடு உள்ளதா?

பதில் – இன்னும் இல்லை. அவர் எம்மிடம் ஒத்துழைப்பு கோரவில்லை.