Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இராஜகிரிய வாகன விபத்து சம்பவம்; பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

.

இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவகதவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அப்போது, ​​வழக்கு விசாரணைகளை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதாக வழக்குரைஞர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிறி பண்டிதரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, இந்த வழக்கை அழைப்பதற்கு வேறு திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்துள்ளார்.