Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மாவீரர் வாரம் நினைவுகூரல்; இரு இளைஞர்கள் வாக்குமூலம்; யாழில் தொடரும் விசாரணை!

.

யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரு இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

மாவீரர் நாள் குறித்து முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை (4) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

அதேவேளை, வல்வெட்டித்துறை பகுதியில் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடியமை தொடர்பில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 06 பேரிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

அத்துடன் மாவீரர் நாள் மற்றும் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, முகநூலில் பதிவிட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 06க்கு மேற்பட்ட இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.