Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஒக்டோபர் மாதம் முதல் நவீனமயப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு விநியோகம்

.

நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தில் கிடைக்குமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (03) தெரிவித்தார்.

நீண்ட காலமாக கடவுச்சீட்டுகள் வழங்கிய நிறுவனம் அல்லாத வேறு நிறுவனத்திடம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடவுச்சீட்டு பெறுவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி, டெண்டர் அழைப்புகள் மற்றும் கொள்முதல் செயல்முறைகள் மிகவும் வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும்.

எனவே நீண்ட காலமாக கடவுச்சீட்டை வழங்கிய நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.