Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அநுர நியூயோர்க் விஜயத்தில் இருதரப்பு கலந்துரையாடல்கள்!

.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இடையேயான இருதரப்பு கலந்துரையாடல்கள் நேற்று (24) பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் நடைபெற்றன. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை சிறப்பாக வரவேற்ற நிலையில், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். 

அதேபோல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி எல்பனீஸுக்கு இடையேயான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் நேற்று (24) பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் நடைபெற்றன. 

இதற்கிடையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போர்த்துகீசிய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா இடையேயான இருதரப்பு கலந்துரையாடல்கள் பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் நடைபெற்றன. 

இந்த சந்திப்புகளின் போது, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூர்யா மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். 

இதற்கிடையில், இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டெரெஸ் இடையே ஒரு சந்திப்பும் நடைபெற உள்ளது.