Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

’தமிழ் மக்கள் ஆதரிக்கின்றவர் ஜனாதிபதியாக வேண்டும்’

.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தி திட்டங்களை என்னால் மேற்கொள்ள முடிந்துள்ளது. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரவேண்டும்.
அவ்வாறான சூழல் வருகின்றபோது தான் தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த விடயங்களை முன்னெடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சாயி சிறுவர் விளையாட்டு விழா களுவாஞ்சிகுடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருந்தோம். எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்கு சேவை செய்பவரை நன்கு அறிந்து எமது மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மிக விரைவாக எமது கட்சி ஒற்றுமையாக நாம் ஒரு முடிவை அறிவிப்போம். அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு எமது மக்களும் சேர்ந்து வருவார்கள் என்றால் நிச்சயமாக இப்பிரதேசத்தில் சிறந்த எதிர்காலத்தை அமைக்க முடியும் என்றார்.