Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யாழில் இயங்கு நிலைக்கு வரவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்!

,

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் இயங்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த தை மாதம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை வழங்கியதோடு, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார்.

அப்போது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் டவுச்சீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கான பணிகள் மிக விரைவாக இடம்பெற்று வருகின்றன.

தேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற, ‘ஒருநாள் சேவைக்கான வலைத்தள சேவைக்கு’ கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை.

இதனால் தென்னிலங்கையில் இருந்து குறித்த சேவை வழங்குநர்கள் பெறப்படவுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை கொழும்பில் இருந்து வருகைதரும் விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.