Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பிலிருந்து 550km தூரத்தில் தாழமுக்கம்!

,

இலங்கையின் தென்கிழக்காக தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம், தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலாக (East Equatorial Indian Ocean) காணப்பட்ட தாழமுக்கமானது (Depression),
கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 15km/h வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,
தற்போது (11.30pm/07.01.2025) தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்றது.

இது பொத்துவில் (Pottuvil) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 400km தூரத்திலும், மட்டக்களப்பிலிருந்து (Batticaloa) கிழக்கு தென்கிழக்காக 550km தூரத்திலும்,
திருகோணமலையிலிருந்து (Trincomalee) தென்கிழக்காக 640km தூரத்திலும்,

காரைக்காலில் (Karaikal – Puducherry) இருந்து தென்கிழக்காக 920km தூரத்திலும்,  சென்னையில் (Chennai) இருந்து தென்கிழக்காக 1070km தூரத்திலும் காணப்படுகின்றது.
இது மேற்கு-வட மேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகர்ந்து,  அடுத்த வரும் 12 மணித்தியாலத்தில் ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) மேலும் வலுவடைந்து வரும்.

அடுத்த வரும் 36 மணித்தியாலத்தில் தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை ஊடறுத்து,  இலங்கையின் கிழக்குக்கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழை காணப்படும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை மகிழ்ச்சியும், நாட்டின் ஏனைய பிராந்தியங்கள் சிலவற்றில் 50மி.மீ. – 75மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.