Breaking News
சீமான் களவாடியுள்ள கருத்தியல் - தமிழிசை சௌந்தரராஜன்
.
நாங்கள் இத்தனை காலமாக எங்களின் கருத்தியலாக சொல்லிக்கொண்டிருந்தோமோ அதனை சீமான் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்துவருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், சீமானின் கருத்து குறித்து தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சீமான் எங்கள் வழியில் வந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் நாங்கள் இத்தனை காலமாக எங்களின் கருத்தியலாக சொல்லிக்கொண்டிருந்தோமோ அதனை சீமான் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். எனவே இதனை எங்கள் கருத்தியலுக்கு கிடைத்துள்ள பலமாகவும், நாங்கள் இதுவரை சொல்லிக்கொண்டிருந்த கருத்தியலுக்கு ஒரு ஆதரவாகவும் இதனை பார்க்கிறேன். இது பாஜகவும், பாஜகவின் கருத்தியலுக்குமான வெற்றியாக பார்க்கிறேன்.
உதாரணத்திற்கு, இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல; பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என அவ்வப்போது நான் கூட்டத்தில் சொல்வதுண்டு.
மதத்தையும் இனத்தையும் மடைமாற்றி பெருமிதம் கொள்ளும் மாண்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்.