Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள்

72 தொழிற்சங்கங்களின் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பொருளாதார நீதியை நிறைவேற்றாதது தொடர்பாக, 72 தொழிற்சங்கங்களின் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, கொடுப்பனவுகளை வழங்குவதாக எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அது ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், இதுவரையில் அந்த வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன்படி, நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாக, மாகாண ரீதியாக அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை கடமையில் இருந்து வெளியேறும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையை செயல்படுத்தும் மாகாணங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

09 – வட மத்திய மாகாணம்
13 – மத்திய மாகாணம்
14 – சப்ரகமுவ மாகாணம்
15 – வடமேற்கு மாகாணம்
16 – தென் மாகாணம்
20 – ஊவா மாகாணம்
21 – மேல் மாகாணம் போன்றவற்றில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.