Breaking News
காசாவில் பணயக்கைதிகள் அறுவர் சடலங்களாக மீட்பு: அமெரிக்க பிரஜையும் உள்ளடங்குவதாக பைடன் உறுதி
.
காசாவில், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் அறுவரின் சடலங்களை இஸ்ரேல் மீட்டுள்ளது.
ரஃபா நகரின் கீழ் சுரங்கப்பாதையொன்றில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சடலங்களாக மீட்கப்பட்ட பணயக்கைதிகளில் ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் என்ற அமெரிக்க குடிமகன் ஒருவரது சடலம் மீட்க்கப்பட்டதை பைடன் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலியப் படைகளால் காஸாவில் மீட்கப்பட்ட அறுவரில் இஸ்ரேலிய அமெரிக்க பிணைக் கைதி ஒருவரும் உள்ளடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டு சுமார் 251 பணயக்கைதிகள் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.