Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

ஆழ்துளைக் கிணறு அகழ்வொன்றின்  போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கபட்டது – ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட இந்த நீர் ஊற்று இலங்கையின்
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது.

பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இனங்கண்ட பின்னரே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.