Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

5 நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப்!

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவிடும் வகையில் ட்ரம்ப் இன்று அதிரடி அறிவிப்பு

ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வரும் சனிக்கிழமை ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28-ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், ஈரானும் பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் ஐ.நா சபையும் போரை நிறுத்தத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவிடும் வகையில் ட்ரம்ப் இன்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்:
ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் சனிக்கிழமை ஈரானுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதன் மூலம் விரைவில் உடன்படிக்கை எட்டப்படும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என உறுதியளித்துள்ள ட்ரம்ப் உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பாதை விரைவில் திறக்கப்படும். அமெரிக்காவும் ஈரானும் இணைந்து இப்பகுதியைப் பாதுகாக்கும் எனவும் "ஈரான் மீதான இந்த நடவடிக்கை ஒரு இராணுவ நடவடிக்கையே தவிர, அது முழு அளவிலான போர் அல்ல. விரைவில் ஒரு நல்ல உடன்படிக்கை ஏற்படும்," என தெரிவித்தார்.