Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

சீரற்ற வானிலை பலர் உயிரிழப்பு; வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்; மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும்.

நாடு முழுவதும் சீரற்ற வானிலை; பலர் உயிரிழப்பு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உயிரிழந்தவர்களில் ஏழுவயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிற 78 மற்றும் 36 வயதான இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், கம்பஹா – பல்லேவல – தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு (01) மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (02) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. வடமேற்கு மாகாணத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் எனவும் அதிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.