Breaking News
பாகிஸ்தானில் வெடித்த போராட்டம்!
.
ஹிஸ்புல்லா தலைவர் நஸரல்லா கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கி, ஹிஸ்புல்லா கொடிகளை கையில் ஏந்தியபடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து, டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும், போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் முயன்றனர்.
போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலால், கராச்சியில் பதற்றமான சூழல் நிலவியது.