3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுத்து அழித்ததாக குவைத் அதிகாரிகள்!
குவைத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டில்!
குவைத் வான்பாதுகாப்பு அமைப்புகள் குறுகிய நேரத்திற்கு முன் பாய்ந்த 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுத்து அழித்ததாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், ட்ரோன் தாக்குதல்களால். Kuwait International Airport இல் உள்ள எரிபொருள் தொட்டிகள், Public Institution for Social Security நிறுவனத்தின் பிரதான கட்டிடம், என இரண்டு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் தற்போது அந்த இரண்டு தீயையும் கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குவைத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டில்!
இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் தொட்டிகளில் ஏற்பட்ட தீயை தற்போது தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், சமூக பாதுகாப்பு அலுவலகத்தின் (Public Institution for Social Security) பிரதான கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் இன்னும் தொடர்ந்துவருகின்றன என்று அரசின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இன்று காலை எல்லைப் பாதுகாப்பு படையினரான இரண்டு பேர் உயிரிழந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.


