Breaking News
120 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பியவர் கைது.
ரஷ்யாவுக்கு அனுப்பிய சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
120 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பியவர் கைது.
நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையரை ஏமாற்றி ரஷ்யாவுக்கு அனுப்பிய சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
சுற்றுலா விசாவில் 120 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து சந்தேக நபர் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் இலங்கையர்கள் பலர் சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்கு சென்று பின்னர் கூலிப்படையினராக இணைந்து போரில் ஈடுபட்டதை அரசாங்கம் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் குறைந்தது 16 இலங்கையர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
288 இலங்கையர்கள் கூலிப்படையாக இணைந்து போரில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.