Breaking News
ஆளில்லா விமானம் மீட்பு- திருகோணமலையில் சம்பவம்!
.

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மீட்கப்படுள்ளது.
இச்சம்பவம் நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது, திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது கடலில் சிறிய ரக விமானம் மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட பின்னர் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.