சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்று முன்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது கட்சிக்குள் எதுவித பிளவும் இல்லை! சந்திரிக்கா.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் மாநாடு நடைபெற்றது
சுதந்திர கட்சி மீண்டும் உயிர் பெற்றதாக கூறுகிறார் சந்திரிக்கா.
மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
“சுதந்திரக் கட்சியின் உதவியுடன் எமது தலைமையின் கீழ் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்று முன்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.
அதற்காக அனைத்து மாவட்டங்களின் ஆசன அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் இணை அமைப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இன்று இடம்பெறவுள்ள கூட்டங்கள் சட்டவிரோதமானதும் ஒழுக்கமற்றதுமான சந்திப்புகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்