இன்று பதவியேற்கின்றார் அனுரகுமார
.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க என்பது தெளிவாக தெரிகின்றது,எங்கள் வாக்கு எண்ணும் நிலைய முகவர்களின் தகவல்களின் படி நாங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம் என்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அனுரகுமாரதிசநாயக்க 50 வீத வாக்குகளை பெற்றுள்ளாரா என்ற கேள்விக்கு நாங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னிலையில் உள்ளோம்,நாங்கள் 50 வீதம் பெறுகின்றமோ என்பது முக்கியமில்லை,இரண்டாவது இடத்தில் உள்ள வேட்பாளரை எங்களை நெருங்க முடியாது என்பது தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியானதும் அனுரகுமாரதிசநாயக்க பதவியேற்பார் ஞாயிற்றுக்கிழமை மாலையாகயிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.