Breaking News
தேசிய மக்கள் சக்தியின் 43 உறுப்பினர்கள்; எதிர்க்கட்சி இருக்கைகளில்!
.
தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் 159 பேருக்கு நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருக்கைகளை வழங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆளும் கட்சியின் 43 உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பக்கம் இருக்கைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும் கட்சியில் 116 உறுப்பினர்களுக்கு மாத்திரமே இருக்கைகள் காணப்படுகின்றன.
எதிர்வரும் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அன்றைய தினம் தான் விரும்பிய வகையில் நாடாளுமன்றத்தில் இருக்கை கொள்ள முடியும்.
எனினும், அதன் பின்னர் சரியான முறையிலான இருக்கைகளை நாடாளுமன்றத்தில் தயார்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.