Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சுமந்திரனுடன் என்ன உடன்பாடு?: வெளிப்படுத்துமாறு அநுரவுக்கு கம்மன்பில அழுத்தம்

.

பொதுத் தேர்தலின் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க தமிழ் அரசுக் கட்சியுடன் ஒப்பந்தமொன்றை ஜனாதிபதி செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

சுமந்திரனின் அமைச்சுப் பதவி பெறுவதை வரவேற்கிறோம். அதே வேளையில், அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு நிபந்தனைகள் குறித்து கவலையடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தெடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றி, புதிய அரசியலமைப்பை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளமை முதல் நிபந்தனை யாக உள்ளது. அந்த அணுகுமுறை நாட்டு மக்களை இன ரீதியாக பிரிக்கும் பிரிவினைவாத நலன்களுடன் ஒத்துப்போகிறது.

இரண்டாவது நிபந்தனையில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தவும் இராணுவத்தினரை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் முதல் மாதத்திற்குள்ளேயே அரசியல் நண்பர்களை பாதுகாக்க இவ்வாறு செயற்பட்டதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் இதுதொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் பொது மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.