Breaking News
நாடு முழுமையாக வௌிநாட்டிற்கு விற்கப்படுமா!
தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து
நாடு முழுமையாக வௌிநாட்டிற்கு விற்கப்படுமா!
கொழும்பில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தினமும் இந்த நாடு ஒட்டுமொத்தமாக வௌிநாடுகளுக்கு விற்கப்பட்டு முழுமையாக மக்கள் அடிமையாகி விடுவார்கள் போல இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு புறம் சீனாக்கு எதிராக மறு புறம் இந்திய, அமெரிக்க தரப்பும் போட்டியிட்டு கொண்டு இருக்கின்றன. இலங்கையின் உள் ஆதிக்க விவகாரத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். தேசிய அடையாள அட்டை தொடர்பான ஒரு வேலைத்திட்டத்தை கூட இந்தியாவிற்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது இந்த நாடு அழிவை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.