Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈரான் போரில் மக்ரோனின் நிலைப்பாடு என்ன ?

வரலாற்று ரீதியாகவே, பிரான்ஸ் என்பது அமெரிக்காவின் 'ஆமாம் சாமி' நாடு கிடையாது. சார்லஸ் து கோல் காலத்திலிருந்தே , "நாங்கள் யாருக்கும் அடிமையில்லை" என்று மார் தட்டிய நாடு இது.

பாரிஸின் வீதிகளில் இன்று ஒரு விவாதம் அனல் பறக்கிறது: "மக்ரோன் ஒரு சுதந்திரமான பிரெஞ்சு அதிபரா? அல்லது வாஷிங்டனின் செல்லப் பிள்ளையா?"  ஈரான் எனும் எரிமலையின் விளிம்பில் நின்று கொண்டு, இம்மானுவேல் மக்ரோன் ஒரு ஆபத்தான நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். ஒருபுறம், ஈரானில் நடக்கும் போரை நிறுத்த  வேண்டிய கட்டாயம்; மறுபுறம், அமெரிக்காவின் ஆக்ரோஷமான பிடிக்குள் சிக்காமல் பிரான்சின் தனித்துவமான 'கௌரவத்தை' (Grandeur) காக்க வேண்டிய நெருக்கடி.

வரலாற்று ரீதியாகவே, பிரான்ஸ் என்பது அமெரிக்காவின் 'ஆமாம் சாமி' நாடு கிடையாது. சார்லஸ் து  கோல் காலத்திலிருந்தே , "நாங்கள் யாருக்கும் அடிமையில்லை" என்று மார் தட்டிய நாடு இது. ஆனால், சர்கோசி அதற்க்கு  முற்றுப்புள்ளி வைக்க ,மக்ரோன் இப்போது அமெரிக்க அதிபருடன் கைகோர்த்து நடக்கும்போது, பிரெஞ்சு மக்கள் முணுமுணுக்கிறார்கள். "மக்ரோன் தனது தனித்துவத்தை இழக்கிறாரா?" என்ற கேள்விக்கு பதில் மிகச் சிக்கலானது. அவர் அமெரிக்காவை ஒரு கூட்டாளியாகப் பார்க்கிறாரே தவிர, தலைவனாகப் பார்க்கவில்லை என்பது மக்ரோனின் வாதம். ஆனால், உக்ரைன் முதல் ஈரான் வரை அமெரிக்காவின் வியூகங்களுக்குள் பிரான்ஸ் மெல்ல மெல்ல இழுக்கப்படுவதை உலக அரசியல் நோக்கர்கள் கவனிக்கத் தவறவில்லை.

சராசரி பிரெஞ்சு குடிமகனுக்கு ஈரான் போர் என்பது வெறும் செய்தியல்ல; அது அவர்களின் சட்டைப்பையில் கைவைக்கும் ஒரு விஷயம். போர் தொடர்ந்தால்  பெட்ரோல் விலை விண்ணைத் தொடும், ஏற்கனவே தள்ளாடும் பிரெஞ்சு பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் செல்லும் என்பது மக்களின் கவலை.இந்த போரில் ஏற்படும் அப்பாவி பொது மக்களின் உயிரிழப்புகளுக்க ஒரு பகுதியினர் கவலைப்பட்டாலும் , இன்னொரு பகுதியினர் 'அமெரிக்க போரை  பிரான்சுக்கும் கொண்டு  வந்து விடுமோ' என்று அச்சப்படுகிறார்கள்.

 "ஏன் நாம் எப்போதும் அமெரிக்காவின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்?எங்களின் தனித்துவம் எங்கே போனது ?" என்ற கோபம் வலதுசாரி மற்றும் இடதுசாரி என இருதரப்பு மக்களிடமும் எழுகிறது. மக்ரோன் 'ஐரோப்பியப் படைகளை' உருவாக்க நினைப்பது, இந்த அமெரிக்கச் சார்பிலிருந்து தப்பிக்கவே. ஆனால், அது இன்னும் கனவாகவே இருக்கிறது.
மக்ரோன் இப்போது ஒரு பிளவுபட்ட பாதையில் நடக்கிறார். ஈரானிடம் மென்மையாகப் பேசி போர்நிறுத்ததை கொண்டுவர நினைக்கிறார். அதே சமயம் அமெரிக்காவைத் திருப்திப்படுத்த ஈரானின் ஏவுகணைத் திட்டங்களைக் கண்டிக்கிறார். இது ஒரு 'ராஜதந்திர கண்ணாமூச்சி'. ஒருவேளை போர் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தால் , மக்ரோன் அமெரிக்காவின் பக்கம் நிற்பாரா அல்லது அமைதித் தூதுவராக ஒதுங்கி நிற்பாரா என்பதுதான் பிரான்சின் எதிர்காலத் தலைமையை நிர்ணயிக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், மக்ரோன் ஒரு 'உலகத் தலைவராக' ஜொலிக்க ஆசைப்படுகிறார். ஆனால், அந்த வெளிச்சம் வாஷிங்டனில் இருந்து வருகிறதா அல்லது பாரிஸிலிருந்து வருகிறதா என்பதில் தான் பிரான்சின் ஆன்மா அடங்கியிருக்கிறது.

- சிவா சின்னப்பொடி