எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகிறோம் விஜய் டி.வி... சினிமாவை மிஞ்சும் மெகா மோசடி!
.

மக்கள் விரும்பி ரசித்து பார்க்கும் சேனல்களில் ஒன்று விஜய் டி.வி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன. தற்போது ஸ்டார் விஜய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டி.வி. பெயரில் மோசடி நடப்பதாக அறிவிப்பு வெளியிட்டு மக்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, காபி வித் டிடி, காபி வித் அனு, சூப்பர் சிங்கர், கனெக்சன் அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழ்கிறது. பெயர் முகம் தெரியாத பலருக்கும் விஜய் டி.வி.யின் மூலம் பிரபலம் அடைந்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி ரோபோ சங்கர், KPY பாலா, தீனா, டிடி என பலருக்கும் அடையாளம் கொடுத்துள்ளது விஜய் டி.வி.
காபி வித் டிடி: சினிமா பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் என பல்வேறு தரப்பில் மக்களின் செல்வாக்கை பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி மிகவும் ரகளையாகவும், ஜாலியான எண்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக ஹிட் அடித்தது. இதன் மூலம் டிடியும் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஆங்கராக பணியை தொடங்கி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் விஜய் டி.வியை உயர்த்தி பேசியுள்ளார். இதுபோன்று பலருக்கும் அறிமுக வாசலாக விஜய் டி.வி. இருந்துள்ளது.
பாசிட்டிவான வைஃப் மோட்: KPY தீனா, பாலா போன்றவர்கள் விஜய் டி.வியை கலாய்ப்பதையே முழு வேலையாக வைத்திருந்தனர். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர்களையும் பIங்கமாய் கலாய்த்து பேசியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. நம் மனதில் உள்ளதை அப்படியே பேசுகின்றனர் என்ற பாசிட்டிவான ரெஸ்பான்சும் கிடைத்தது. நேர்மறையான விமர்சனங்கள் வந்ததில்லை. தன்னுடன் நடிக்கும் போட்டியாளர்களை கூட விட்டு வைக்காமல் கலாய்ப்பதும் ரசிக்கும்படியே இருந்தன. விஜய் டி.வி அந்தளவிற்கு சுதந்திரம் வழங்கியது என்றே கூறலாம். இப்படிப்பட்ட விஜய் தொலைக்காட்சிக்கு அப்படி சோதனை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
விஜய் டிவி பெயரில் மோசடி: சமீபகாலமாக சினிமா வாய்ப்ப்பு தேடி அலையும் நபர்களை குறிவைத்து பிரப தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பெயரில் மோசடி அதிகம் நடந்து வருகிறது. அந்த வகையில், விஜய் டி.வி.யை பயன்படுத்தி மோசடி நடப்பதாகவும், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க அந்த சேனல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்டார் விஜய் அறிக்கை: "விஜய் டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வாங்கி தருவதாக சிலர் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். அதற்கு நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை. ஸ்டார் விஜய் பெயரை பயன்படுத்தி வரும் இத்தகைய போலியான வாய்ப்புகள் மற்றும் அலையுப்புகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்டார் விஜய் பெயரை பயன்படுத்தி தனிநபர் அல்லது சிலர் உங்களிடம் புகைப்படங்களை பயன்படுத்தி பெறும் தொகைக்கு தனிநபரின் தவறுகளே ஆகும். இதற்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகிறோம்" என அறிவித்துள்