Breaking News
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத்துறை மேலாளருமான விநாயகம் அவர்களின் இறுதிப்பயணம்.
பல பெருமிதமான தமிழர்களின் வெற்றியின் பின்னால் இருந்த புலனாய்வின் “பிதாமகனி்ற்கு” வீரவணக்கம்..
புலனாய்வுத்துறை மேலாளருமான கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (விநாயகம்) அவர்களின் இறுதிப்பயணம்.
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத்துறை மேலாளருமான கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (விநாயகம்) அவர்களின் இறுதிப்பயணம். இலங்கையில் இருசமபலமான இராணுவங்கள் இருக்கின்றன என்பதை சர்வதேசம் உட்பட இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு தமிழர்களை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைக்க காரணமான தாக்குதல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான வெற்றித்தாக்குதல் ஆகும்.. இத்தாக்குதலின் மூளைகளில் ஒருவரான “விநாயகம்” அவர்கள் இன்று தனது இறுதிப்பயணத்தை மேற்கொள்கின்றார்.. உலகின் இராணுவமேதைகள் பு லி க ளின் பல தாக்குதல்களை வியப்புடன் பார்த்திருக்கின்றார்கள். எந்த ஒரு தேசத்தின் உதவியுமின்றி, வரலாற்றின் போர்ப்பாடங்களில் எங்குமே காணக்கிடைக்காத வகையிலான அவர்களின் வெற்றித்தாக்குதல்களும், அதன் முறைமைகளுமே அவர்களை இல்லாதொழிக்கவேண்டும் என்னும் சிந்தனையினை சர்வதேசத்திடம் உருவாக்கியது.. பல பெருமிதமான தமிழர்களின் வெற்றியின் பின்னால் இருந்த புலனாய்வின் “பிதாமகனி்ற்கு” வீரவணக்கம்..