உலகின் அதிக வயது பெண் மரணம்: 117 வயதில்..!
.
உலகின் அதிக வயதான பெண்மணியும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட பதிவில்,
மரியா பிரான்யாஸ் எங்களை விட்டு பிரிந்துவிட்டார். அவர் விரும்பியபடியே தூக்கத்தில், அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியின்றி இறந்ததாக கேட்டலான் மொழியில் பதிவிட்டுள்ளனர்.
மரியாவின் அறிவுரை மற்றும் கருணைக்காக நாங்கள் எப்போதும் அவர்களை நினைவில் கொள்வோம் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பிரான்யாஸ் கடந்த 1907ல், மார்ச் 4ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அவர் இளமையாக இருந்தபோது அவரது குடும்பம் ஸ்பெயினுக்குத் திரும்பியது. கட்டலோனியாவில் குடியேறிய அவர் கடந்த 1931ல் ஜோன் மோரெட்டை மணந்தார். அவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று குழந்தைகள். 11 பேரக்குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் இருந்தனர்.
பிரானியாஸ் கடந்த மார்ச் 4, 2023இல் தனது 116வது பிறந்தநாளைக் கொண்டாடினார். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் உள்ள சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்துவந்தார். இதையடுத்து அவரின் உயிர் இன்று பிரிந்தது.
பிரான்ஸியாஸின் மரணத்தைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் ஜப்பானைச் சேர்ந்த டோமிகா இடூகோ என்ற பெண்மணி ஆவார். மே 23, 1908ல் பிறந்த அவர் 116 வயதுடையவர் என்று ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.