கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்; வீடுகளின் விலையிலும் மாற்றம்
.
கனடாவின் பொருளாதார வளர்ச்சி அடையும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னணி நிதி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான டெலொயிட் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் பிரதான வட்டி வீதம் 3 ஆக குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் வங்கி வட்டி வீதம் 3.75 வீதம் ஆகவும் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் வங்கி வட்டி வீதம் 2.75 வீதம் ஆகவும் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சியை பதிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கனடா பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து வெற்றிகரமாக வெளிவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச வருமான அளவு சராசரி தொகை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, 12 நகரங்களில் இவ்வாறு வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.