Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: 33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு - வான் கதவுகள் திறப்பு!

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகளை அண்டிய பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் கடும் மழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.  இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது வான்பாய்ந்து வரும் முக்கிய நீர்த்தேக்கங்களின் விபரங்கள் மாவட்ட ரீதியாக வருமாறு:
அனுராதபுரம்: இராஜாங்கனை நீர்த்தேக்கம்.
பதுளை: அபேவெல நீர்த்தேக்கம்.
அம்பாந்தோட்டை: மௌஆற, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள்.
குருநாகல்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்கள்.
கண்டி: நாலந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்கள்.
மொனராகலை: அலிகொட்டஆற நீர்த்தேக்கம்.
மன்னார்: யோத வாவி.

அதிகப்படியான நீர் வரத்து காரணமாகப் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன: இராஜாங்கனை நீர்த்தேக்கம்: 12 வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 14,000 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்துவிடப்படுகிறது.
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கம்: 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 4,100 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது. வெஹெரகல நீர்த்தேக்கம்: 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்குள் வெளியேற்றப்படுகிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், ஆறுகளுக்கு நீர் திறந்துவிடப்படுவதாலும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகளை அண்டிய பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.