Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காது உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்

.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவித்து அதனை நிறுத்தியது. இவ்வாறு காலத்தை இழுத்தடித்து, மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக நடத்த வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி மக்கள் தங்கள் விரும்பிய ஒருவரை தெரிவு செய்துக்கொள்ள உரித்துடையவர்கள்” என தெரிவித்தார்.