Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கந்தளாய் பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கிப் பலி!

,

கந்தளாய் பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கிப் பலி!
கந்தளாய், பேராற்று வெளி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் இன்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் 11:30 மணியளவில் நான்கு இளைஞர்கள் குறித்த ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் வழக்கமாக ஆற்றில் நீர் அதிகமாக இருக்கும் போது, ஒரு இடத்தில் குளிக்க ஆரம்பித்து நீரோட்டத்துடன் மிதந்து சென்று, அதற்கு அடுத்ததாக உள்ள பகுதியில் கரையேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இன்றைய தினமும் அவ்வாறே குளித்த நிலையில், அவருடன் வந்த நண்பர்கள் குறித்த இளைஞன் அடுத்த இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கருதி, அவரது உடைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், பள்ளிவாசல் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிய நண்பர்கள், குறித்த இளைஞன் வீடு திரும்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பிற்பகல் இரண்டு மணியளவில்  தேடத் தொடங்கியுள்ளனர். இதன்போது, அவர் குளித்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் நீருக்கு அடியில் சிக்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

,