Breaking News
நிறைவேற்று அதிகாரம் மற்றும் 2/3 பாராளமன்ற பெருன்பான்மை பலம் கொண்டிருக்கும் அனுரா சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகளின் தயவில் தீர்வு காணமுடியும் என ஏமாற்றுகின்றார் .
அனுரா ஒரு அப்பட்டமான சிங்கள இனவாதி. இவரிடம் இருந்து தமிழ் மக்கள் ஒன்றையும் எதிர் பார்க்க முடியாது.

நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் அவர்களை இணைத்து தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு தீர்வு காண முடியும் என திரு அனுரா குமார திசநாயக்க சொல்லி இருக்கின்றார்.ஆனால் ஸ்ரீ விமல தேரரின் பங்கேற்புடன் தான் தையிட்டியில் சட்டவிரோத விகாரை க்கான (Vihara) அடிக்கல் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவினால் நாட்டப்பட்டது. அதே போல ஸ்ரீ விமல தேரரின் பங்கேற்புடன் தான் அங்கு 100 அடி உயரமான தூபிக்கான (Stupa) அடிக்கல் ஜெனரல் சவீந்திர சில்வாவினால் நாட்டப்பட்டது, கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவிரோத விகாரை சூழலில் மற்றுமொரு கட்டுமானமும் ஸ்ரீ விமல தேரரின் பங்கேற்புடன் தான் பொலிஸ் அதிகாரியினால் திறந்து வைக்கப்பட்டது,அதாவது சட்டவிரோத விகாரையின் சகல கட்டுமானங்களும் ஸ்ரீ விமல தேரரின் ஒத்துழைப்புடன் தான் நடந்தன. இது மாத்திரமின்றி ஸ்ரீ விமல தேரர் மிக நீண்டகாலமாக ஆரியகுளம் நாக விகாரையுடன் தொடர்புபட்டது என்றும் அதனை புனித பிரதேசமாக அறிவிக்க கோரி வருகின்றார்.
அதே போல ஆரியகுளத்தின் மைய பகுதியில் ஒரு தியான மண்டபத்தை அமைக்கவும் முயற்சித்து வருகின்றார், இது போதாதென்று அப் பகுதியை சுற்றுல்லா மையமாக விருத்தி செய்யவும் தடை செய்து வருகின்றார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஞானரத்ன தேரர் என்கின்ற பிக்குவின் பூதவுடலை எதிர்ப்புக்கு மத்தியில் ஸ்ரீ விமல தேரர் தகனம் செய்திருந்தார். இவ்வாறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் ஸ்ரீ விமல தேரர் என்கின்ற மகானையும் சட்டவிரோத தையிட்டி விகாரை விகாரதிபதியையும் இணைத்து பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என திரு அனுரா குமார திசநாயக்க கதை சொல்லி இருக்கின்றார், அதாவது நிறைவேற்று அதிகாரம் மற்றும் 2/3 பாராளமன்ற பெருன்பான்மை பலம் கொண்டிருக்கும் ஆட்சியாளர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகளின் தயவில் தீர்வு காணமுடியும் என ஏமாற்றுகின்றார்.
ஆனால் ஊழலை ஒழிப்போம் என பேசும் திரு அனுரா குமார திசநாயக்க சட்டவிரோத கட்டுமானத்திற்கு எவ்வாறு பௌத்த சாசன அமைச்சு நிதி விடுவித்தது என்பது பற்றி விசாரிக்க கூட தயாரில்லை, சட்டவிரோத கட்டுமானத்திற்கு மொறட்டுவை பல்கலை கழகத்திடம் எந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவி பெறப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்க தயாரில்லை. இராணுவத்தினர் கட்டுமானங்களில் ஈடுபட்டது குறித்தோ அல்லது இராணுவ நிர்வாகத்தின் கீழ் விகாரை இருப்பது குறித்து கூட விசாரிக்க தயாரில்லை, சட்டவிரோத கட்டுமான திறப்பு விழாவில் அரசாங்க அதிகாரியான பொலிஸ் அதிகாரி எவ்வாறு கலந்து கொண்டார் என்பது குறித்து வாய் திறக்க கூட தயாரில்லை.

ஆனால் பயங்கரவாத தடுப்பு பிரிவு அப் பகுதி மக்கள் மீதும் போராட்டங்களில் ஈடுபடும் பெண்கள் உட்பட்ட செயல்பாட்டாளர்கள் மீதும் விசாரணைகளை ஏவி தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. மறுபுறம் இந்த விகாரை அமைந்துள்ள பகுதியில் 406 சிங்களக் குடும்பங்களின் காணி என்று இராணுவத்தினர் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் நியாப்படுத்துகின்றார்கள், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் தீர்வு தருவதாக அழைத்து ஸ்ரீ விமல தேரரின் நாக விகாரையில் வைத்து 600 சிங்கள குடிகளின் காணி என பௌத்த சங்கம் ஊடக பதிவு செய்கின்றார்கள். இதற்கிடையில் விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி, மட்டுமின்றி சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு வழங்க வேண்டும் என இராணுவ புலனாய்வாளர் ஒருவர் தலைமையிலான அமைப்பு அரச அதிபருக்கு கடிதம் எழுதுகின்றது.
குறிப்பாக அங்கு பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம், புத்த மெதுரா,போதி, அன்னதான மடம், மடாலயம் , ஓய்வு மண்டப வசதிகள், தியான மண்டபங்கள்,பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகின்றது
தங்கள் பூர்விக நிலத்திற்காக இராணுவம், புலனாய்வாளர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு, பிக்குகள் என பல முனை அச்சறுத்தல்களை மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையில் அரசியல்வாதிகள் தான் பிரச்சனை என்றும் பிக்குகளை வைத்து தீர்க்கலாம் என கதை சொல்வது அசிங்கமாக இருக்காதா.
இனமொன்றின் குரல்