50 வீதவாக்குகள் எவருக்கும் கிடைக்காது; 53 இலட்சம் வாக்குகளே கிடைக்கும்
.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் குறைந்தது 53 இலட்சம் வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதான வேட்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கே இம்முறை 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் ஒருவர் குறைந்தது 40 – 45 இலட்ச வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் அதிகபட்சமாக 53 இலட்சம் வரை செல்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அதிகபட்ச வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் 35 – 40 இலட்சம் வரையான வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் மூன்றாவது மற்றும் நான்காவது வேட்பாளர்கள் குறைந்தது 20 இலட்சம் வாக்குகளை பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகளால் பிரதான வேட்பாளர்களாக அடையாளம் காணப்பட்ட எவராலும் 50 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.