Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

21,000 பாலஸ்தீனிய குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்!

.

 

காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்.
காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை.

யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சேவ் த சில்ட்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
சேவ் தி சில்ரன் அறிக்கையின்படி, மோதலில் 33 இஸ்ரேலிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காசா பகுதியில் அதிகளவான இஸ்ரேலிய குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்,