இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு 30 நாள் அனுமதி அளிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை!
"இந்தியா என்ன அமெரிக்காவின் அடிமைகளா?”
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு 30 நாள் அனுமதி அளிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
'இந்தியா என்ன அமெரிக்காவின் அடிமைகளா?'
அவர்கள் எதற்கு அனுமதி கொடுக்க வேண்டுமா?' – இந்த கேள்வி ஒவ்வொரு இந்தியனின் மனத்தையும் எரிச்சலடையச் செய்கிறது! இந்திய நாட்டுக்கு தேவையான எண்ணெயை வாங்குவதை தீர்மானிக்க வேண்டியது இந்திய அரசு. இந்திய பிரதமரும் வெளியுறவு அமைச்சகமும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது இவர்களை தானே... இவர்களை அவர்கள் ஆளுகிறார்கள் என்றால் உண்மையில் இந்திய மக்களை யார் ஆள்கிறார்கள்.
இந்த எண்ணமே பலருக்கு கோபமும் இயலாமையும் ஆத்திரமும். இப்பொழுது இது ஒவ்வொரு இந்தியனின் தன்மானத்தையும் சீண்டும் விஷயமாக மாறியிருக்கிறது.!! ஆனால் கசப்பான நிஜம்....இந்தியா போன்ற நாடுகள்இ உலக வல்லரசுகளுடன் பல கண்ணுக்குத் தெரியாத பொருளாதாரக் கயிறுகளால் கட்டிப் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா ஏதோ தர்ம பிரபு போல இந்தியாவுக்கு அனுமதி வழங்குவதாகத் ஒரு பாவ்லாஇ 'உலக ரவுடி உள்நோக்கம் இல்லாம எதுவும் செய்யாது'.
இப்போதைய சூழலில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கவில்லை என்றால்இ அது பெரும்பாலும் வளைகுடா நாடுகளிலிருந்தே வாங்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் 'ஹார்முஸ்' நீரிணை போன்ற முக்கிய கடல் பாதைகள் சிக்கலில் இருக்கிறது.. வளைகுடா நாடுகளில் போர்ச் சூழலால் தற்பொழுது எண்ணெய் விநியோகம் மிகவும் குறைந்துள்ளது.
அந்த குறைந்த எண்ணெயை இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகள் அதிகமாக வாங்க ஆரம்பித்தால்இ உலக சந்தையில் எண்ணெய் தேவையும் விலையும் அதிகரிக்கும். மேலும் ஐரோப்பாவிலும் மேற்குலகிலும் இந்தியா வழிகளால் செல்லும் எண்ணை தடைப்படும். விளைவு அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்ந்துஇ அந்நாட்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும்....இந்தியா ரஷ்யாவிடம் வாங்கினால் தான் அமெரிக்கா தப்பிக்க முடியும்' என்பதே நிதர்சனம்.
'இந்தியா வளைகுடா சந்தையை அழுத்தாமல் ரஷ்யாவிடமிருந்து வாங்கட்டும்' என்ற அமெரிக்காவின் பொருளாதார அரசியல்..பெருந்தன்மை' நாடகத்தின் பின்னணி இதுதான்.இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பல்வேறு அழுத்தங்களாலும்இ வர்த்தக கட்டுப்பாடுகளாலும்இ அந்த அளவு ஓரளவு குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமெரிக்கா பேசும் விதம் என்னவென்றால்இ 'இன்று தான் அனுமதி கொடுக்கிறோம்... அதுவும் 30 நாளுக்கு மட்டும்' என்று ஒரு உலக ரவுடி போல் நடக்கும் காட்சியை உருவாக்குகிறது.
இந்த சூழலில் இந்தியாவுக்கு இன்னொரு பெரிய பயமும் இருக்கிறது. உலக வங்கி பரிவர்த்தனைகளின் முக்கிய நரம்பு என்று சொல்லப்படும் ளுறுஐகுவு. அதன் தலைமையகம் டீநடபரைஅ-ல் இருந்தாலும்இ அதன் மீது மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துவது அமெரிக்கா தான். இன்று உலக நாடுகளின் வங்கி அமைப்புகள் பெரும்பாலும் இந்த ஒரே நிதி நரம்பு மூலம் தான் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பிலிருந்து ஒரு நாடு நீக்கப்பட்டால்... ஈரான்இ ரஷ்யாவை நீக்கினார்கள். அந்த நிலை வந்தால்இ ஒரு நாட்டிடம் டாலர் இருந்தாலும் கூட உலக நாடுகளுடன் வங்கி வழியாக பண பரிவர்த்தனை செய்ய முடியாது. அதனால் இறக்குமதிஇ ஏற்றுமதி அனைத்தும் முடங்கிவிடும்.
அதனால் தான் இந்தியா நேரடியாக மோதுவதற்கு முன் பல முறை யோசிக்கிறது.ஆனால் இந்த நிலை எப்போதும் இப்படியே தொடர்ந்து விடுமோ என்பதுதான் மக்கள் ஒவ்வொருவரின் பயமும். இந்தியா. டம் வளங்கள் குறைவாக இல்ல. ஆனால் அவற்றை உலக சக்தியாக மாற்றும் பொருளாதார வலிமை.? உலக அரசியல் என்பது உணர்ச்சிகளால் ஆனது அல்ல – சக்தி சமநிலைகளால் இயக்கப்படும் ஒரு களம்.
- அம்மாசகஸ்ரா


