Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர்.

5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு

 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாளை மறுநாள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதி என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் நாளை முதல் முறையாக கூடவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் விஷம், அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை, புத்தாண்டின் பின்னர் நாளை அமைச்சரவையும் நாளை கூடவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு நீதி அமைச்சினால் இரண்டு புதிய அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டங்களை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட உள்ளன