Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போராட்டம் மகத்தானது. அது சாதாரண மனிதனை போராளியாகவும் மாமனிதனாகவும் மாற்றுகிறது.

.

போராட்டம் மகத்தானது. அது சாதாரண மனிதனை போராளியாகவும் மாமனிதனாகவும் மாற்றுகிறது. சாதாரண இளைஞனான வசந்தனை மாமனிதன் மில்லராக மாற்றியதும் இந்த போராட்டமே. வசந்தன் எனது அயல் கிராமம் துன்னாலையை சேர்ந்தவர். அவரை எனக்கு படிக்கிற காலத்தில் இருந்து தெரியும். நாம் எல்லோரும் தாமரைக்குளத்தில் குளித்தது, அதன் அருகில் வயல்வெளியில் கிரிக்கட் விளையாடியது எல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது. நாம் எமது இயக்க செலவுகளுக்காக பருத்தித்துறையில் இருந்த வங்கி ஒன்றில் பணம் கொள்ளையிட முடிவு செய்தோம்.அந்த வங்கியின் பொறுப்பாளராக வசந்தனின் தந்தையார் இருந்தார். அவர் போராட்டத்திற்கு ஆதரவான உணர்வாளராக இருந்தார். எனவே அவரிடமே சென்று ஆலோசனை கேட்டோம். நாம் வெற்றிகரமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அவரே எமக்கு பெரிதும் உதவினார். வசந்தன் மற்றும் மதி இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர். ஆனால் மதியின் சகோதரர் மதியை திருப்பி அழைத்து வந்து தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இயக்கத்தில் சேர்த்துவிட்டார். லாறியில் வெடிமருந்தை நிரப்பிக் கொண்டு சென்று வெடிக்க வைத்து எதிரி முகாமை நிர்மூலமாக்கும் தாக்குதல் முதன் முறையாக வசந்தன் மேற்கொண்டதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் வசந்தனின் நண்பன் மதியே இந்த வகையான தாக்குதலை கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு முதலில் மேற்கொண்டவர். ஆனால் அத் தாக்குதல் வெற்றிபெற வில்லை. வசந்தன் தன் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அது அவருடைய சொந்த ஊரான கரவெட்டியை மட்டும் அதிர வைக்கவில்லை. முழு இலங்கையையும் அதிர வைத்தது.
போராட்டம் வசந்தனை மில்லராக மாற்றியது. இன்று மில்லர் பெயர் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் எதிரிகளுக்கு அதிர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.