Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேர்தல் அன்று கேஸ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது?: ஊடகவியலாளரின் கேள்விக்கு முன்னாள் ஆணையாளரின் சுவாரஸ்ய பதில்

.

தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீட்டில் எரிவாயு தீர்ந்து போனால், சிலிண்டரை எடுத்துச் செல்வதில் பிரச்சினை இருக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தன்று தனிநபர் ஒருவர் சின்னத்தைக் காட்டி வீதியில் நடமாட முடியும் என்றாலும், ஊர்வலமாகச் செல்வதைத் தடைசெய்யும் திறன் பொலிஸாருக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது ஒருவர் துவிச்சக்கரவண்டியில் எரிவாயு சிலிண்டர்களை கட்டிக்கொண்டு செல்வாலோ அல்லது நட்சத்திரம் அல்லது திசைகாட்டியை வீதியில் காண்பித்தாலோ அது தேர்தல் சட்டத்தை மீறும் செயலா? என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலை போன்று முற்றாக அமைதியாக இருப்பதாகவும், அமைதியான நீர்த்தேக்கத்தின் ஆழம் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மாகாணங்களில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் கூறினார். வீடு வீடாக அதிக அளவில் மக்கள் செல்வது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகளை இரவு 11 மணியளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

எனினும் தேர்தல் தினத்தன்றும் மக்கள் தமது தேவைக்காக சிலிண்டரை கொண்டு செல்லும் போது, அதுவும் ஒருவித பிரச்சாரமாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.